Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி ஏடிஎம்மில் பணம் மட்டுமல்ல, தங்கத்தையும் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா…..????

நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளும் தற்போது டிஜிட்டல் வயமாகப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணத்தை பெறுவது போல தங்க நாணயங்களை பெற முடியும். நாட்டின் முதல் தங்க ஏடிஎம் இயந்திரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்த முதல் தங்கை ஏடிஎம் பேகம்பேட்டில் உள்ள அசோக் ரகுபதி சேம்பர்சில் கோல்ட் சிக்கா என்ற நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தங்க ஏடிஎம் மூலம் தங்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்க நாணயங்களை பெற்றுக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க தூய்மையான தங்கம். இந்த தங்கம் ஏடிஎம் மூலமாக 0.5, 1, 2, 5, 10, 20, 50, 100 ஆகிய கிராமங்களில் கிடைக்கும். இதன் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Categories

Tech |