Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 1.11 லட்சம் இளைஞர்களுக்கு வேலை…. அமைச்சர் தகவல்…!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது.

இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம்களால் 1.11 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார். 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்து சேர்ந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் பெரம்பலூரில் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைத்ததில் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என கூறினார்.

Categories

Tech |