Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும்…. 7 நாட்களில் தபாலில் வீடு தேடி வரும் சபரிமலை பிரசாதம்….!!!!

இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் முன்பதிவு செய்தால் சபரிமலை பிரசாதம் 7 நாட்களில் வீடு தேடி வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்களுக்காக சாமி பிரசாதம் என்ற திட்டத்தை அஞ்சல் துறை தற்போது நடத்தி வருகின்றது. இதில் மூன்று வகையான பிரசாதம் அனுப்பப்படும். 520 ரூபாய் பாக்கெட்டில் ஒரு அரவணை, 960 ரூபாய் பாக்கெட்டில் நான்கு அரவணை, 1760 ரூபாய் பாக்கெட்டில் பத்து அரவணை இருக்கும்.

அதனுடன் அனைத்து பாக்கெட்டுகளிலும் நெய், குங்குமம், மஞ்சள் மற்றும் விபூதி போன்றவற்றையும் இடம் பெற்றிருக்கும். இந்தியாவின் எந்த தபால் நிலையத்தில் இருந்தும் இதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். நீங்கள் முன் பதிவு செய்த ஏழு நாட்களுக்குள் பிரசாதம் உங்களுக்கு வந்து சேரும். சபரிமலை ஐயப்பன், சன்னிதானம் அஞ்சல் சபரிமலை 689713 என்ற முகவரியில் இது செயல்பட்டு கொண்டிருக்கிறது.

Categories

Tech |