டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. வருகிற 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. தன்னுடைய பெயர் இல்லை என கூறி தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டல்லு புராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் வாக்களித்துள்ளார்.
Categories
“வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவரின் பெயர் மாயம்”… வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு..!!!!
