Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீமதி பெற்றோரின் கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்  வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  உயிரிழந்த மாணவி செல்போனை  பயன்படுத்தவில்லை எனவும்,  பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை  செல்போனை ஏதும் பயன்படுத்தி இருந்து,  அந்த செல்போனை காவல்துறையினரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்றால் அது ஆவணங்களை மறைத்தது உள்ளிட்ட சட்டங்களின் கீழ் சட்டப்படி தவறானது என்றும், அதற்காக பெற்றோரிடம் விசாரணையை நடத்த நேரிடலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாணவினுடைய தந்தை தரப்பு வழக்கறிஞர்,  நீதிபதி சி.சந்திரசேகர் முன்பு ஆஜராகி,  மாணவியின் செல்போனை காவல்துறையிடம் நாங்கள் ஒப்படைக்க மாட்டோம் எனவும்,  வேண்டுமானால் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் செல்போனை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு நீதிமன்றமானது அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ்,  செல்போனை பெற்றுக் கொள்ள மறுத்து செல்போன் காவல்துறையிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  அப்போது நீதிபதி வழக்கை புலன் விசாரணை செய்துவரும் காவல்துறையிடம் செல்போனை வழங்கினால்தான்,

உடனடியாக அது தடவியல் சோதனைக்கு அனுப்பி, அறிக்கை பெற முடியும். எனபதால் மாணவி பெற்றோர் கோரிக்கையை நிராகரித்தார், கால தாமதம் செய்யாமல் செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |