Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் 58பேர் தாயகம் திரும்பினர் …..!!

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தயக்கம் திரும்பியது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது.

அதேபோல ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக 237 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 7,161 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர்.  இதனால் அங்கு போக்குவரத்து சேவையை துண்டிக்கப்பட்டது. இதனால் பல இந்தியர்கள் சிக்கி தவிதனர். ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமான படையின் சி 17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster) என்ற விமானம் நேற்று இரவு 8: 30 மணியளவில் தெஹ்ரான் (Tehran) புறப்பட்டது.

இந்த விமானம் தெஹ்ரானில் அதிகாலை 2 மணியளவில் தரையிறங்கி அங்கிருந்த 58 பேரை முதல்கட்டமாக இந்தியா அழைத்து வந்தது. இவர்கள் அனைவரும் ஹிண்டன் விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட இருக்கின்றனர். ஈரானில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களும் விரைவில் மீட்கப்பட்டு தயக்கம் அழைத்து வரப்படஉள்ளனர்.

Categories

Tech |