Categories
இந்திய சினிமா சினிமா

”வீர சிம்ஹா ரெட்டி” படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்….. வைரலாகும் போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வரும் திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |