“விட்னஸ்” திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியீடு.
புகைப்படக் கலைஞரான தீபக்கின் முதல் படம் விட்னஸ். இந்தப் படத்தை இவரே இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு முத்துவேல், ஜே. பி. சாணக்யா ஆகிய இருவரும் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் விஷ்வா பிரசாத் தயாரித்துள்ளார். இந்த “விட்னஸ்” திரைப்படத்தில் ஸ்ரீநாத், ரோகினி, அழகம்பெருமான் மற்றும் ஷ்ரத்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் மலக்குழி மரணங்கள் பற்றி பேசுகிறது. இதனை அடுத்து விட்னஸ் திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இசையில் கபிலன் பாடல் எழுத பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முக்கியமான உரையாடல் எல்லாம் சமூகத்தில் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பீபுள் மீடியா பேக்டரி வழங்கும் இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.