Categories
உலக செய்திகள்

மணி கணக்கில் பணி செய்தும்… இறந்து விடுவேன் என நினைத்தனர்…? ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன பணியாளர் குற்றச்சாட்டு…!!!!!

ஜான் ஜான்சன் (62) என்பவர் எலான் மஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபர்த்துள்ளர். இவர் பிளாக் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், தன்னுடைய தொழில் பயணம் குறித்த மனக்குமுறலை கூறியுள்ளார். அதாவது கடந்த 2018 -ஆம் வருடம் 58 வயதில் ஸ்பேஸ்எக்ஸ்  நிறுவனம் ஆப்டிகல்ஸ் எனப்படும் ஒளியில் சார்ந்த பொறியியலில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்றதற்காக என்னை பணியில் அமர்த்தியது. விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற வெவ்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு இந்த துறையின் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்நிலையில் என்னுடைய வாழ்நாட்களிலேயே நீண்ட நாள் பணியிலேயே செலவிட்டுள்ளேன். இரவு, பகல் பாராது  வாரத்தின் 7 நாட்களும் ஸ்பேஸ் எக்ஸ்-ல் செலவிட்டேன். வேலை முடிவதற்கு தேவையான முயற்சிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டே வந்தேன். மேலும் தினமும் 10 முதல் 12 நேரம் வரை வேலை செய்தேன். எனக்கு தெரிந்தவரை என்னை விட அதிகமாக பணியாற்றியவர்கள் என நிறுவனத்தில் யாரும் கிடையாது.  தொழிலுக்காக பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்திருக்கின்றேன். கடந்த  2020 – ஆம் வருடம் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற போது நிலைமை மாறியது. அதாவது நான் இறந்து விடுவேன் அல்லது ஓய்வு பெற்றுவிடுவேன் என நினைத்து அவர்கள் என்னுடைய பணிகளை குறைந்த அனுபவம் நிபுணத்துவம் கொண்ட ஒரு இளம் பணியாளரிடம் ஒப்படைத்து விட்டனர்.

பின் வயது வேற்றுமை குறித்து மனிதவளத் துறை உயர் அதிகாரியிடம் சென்று நான் புகார் அளித்தேன். ஆனால் அவரிடம்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் உங்களுடைய தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் எதுவும் இல்லை.ஏனென்றால்  வர்த்தக நடைமுறைகள் மாறி உள்ளது என அவர் தெரிவித்தார். இருப்பினும் நிறுவன உரிமையாளர் என்னிடம்  வேறு புதிய வேலை தருகிறேன் என உறுதியளித்துள்ளார். ஆனால் அந்த பணி எனக்கு  ஒத்துவரவில்லை. அதனால் கடந்த ஜூலை மாதம் நிறுவனத்தில் இருந்து நான் விலகினேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |