இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் கனடா நாட்டில் வசிக்கிறார்கள். கனடா நாடு என்பது பெரும்பாலானவர்களின் விருப்ப நாடாகவே உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் தாண்டி அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். கனடா தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை உயர்த்த நிரந்தர குடியிருப்பாளர்களை ஊக்குவித்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நான்கு லட்சம் பேருக்கும் மேலாக வெளிநாட்டவர்களை அனுமதித்தது.
இந்த நிலையில் கனடாவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி. ‘ஓபன் ஒர்க் பெர்மிட்டின்’ கீழ் பணிபுரியும் இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்கள், தற்காலிக பணி அனுமதியுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் பயனடைவார்கள். முன்னதாக, ‘ஓபன் ஒர்க் பெர்மிட்’ பெற்ற ஊ ஊழியரின் துணை, உயர் திறமையான வேலை செய்தால் மட்டுமே பணி அனுமதி வழங்கப்பட்டது.