பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கி வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு என்பதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு சில சமயங்களில் வீடு கிடைத்து விடும். ஆனால் பலருக்கு மானியம் மட்டும் கிடைக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்தத் திட்டத்தில் உங்களுடைய ஸ்டேட்டஸ் என்ன என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு நீங்களும் விண்ணப்பித்து நடப்பு ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்கள் பெயரை சரி பார்க்க விரும்பினால் முதலில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் சிட்டிசன் அசெஸ்மென்ட் என்ற விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் மதிப்பீட்டு நிலையை கண்காணிக்கவும் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்தவுடன் பதிவு எண்ணை நிரப்பி உங்களின் நிலையை சரிபார்க்க கோரப்பட்ட தகவலை கொடுக்கவும். அதன் பிறகு மாநிலம் மற்றும் உள்ளிட்ட விவரங்களை தேர்ந்தெடுத்து சமர்ப்பித்தவுடன் உங்கள் விண்ணப்பத்தை நிலை திரையில் தோன்றும்.
மேலும் இந்த திட்டத்திற்கு புதிதாக நீங்கள் விண்ணப்பிப்பதாக இருந்தால் pmaymis.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் குடிமகன் மதிப்பீடு என்ற விருப்பத்தை கிளிக் செய்து நீங்கள் தங்குவதற்கு ஏற்ப விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் ஆதார் எண்ணை நிரப்பி check என்பதை கிளிக் செய்த பிறகு ஆன்லைன் படிவம் திறக்கப்படும். பின்னர் தோன்றும் திரையில் அனைத்து தகவல்களையும் நிரப்பியவுடன் சமர்ப்பித்த பிறகு உங்கள் திரையில் ஒரு விண்ணப்ப எண் காட்டப்படும். அதனை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ள வீடு இல்லாத அனைவரும் பயன்பெற முடியும்.