நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேசமயம் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அரசியல் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்தஇலவச அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் முன்னதாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் வரை மக்கள் இதனை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போர்ட்டபிள் ரேஷன் கார்டு என்ற வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மக்கள் நாட்டின் எந்த ஒரு மூலையில் இருந்தும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் இதன் மூலமாக ரேஷன் கடைகளில் இருந்து பொருட்கள் வெளியேறுவது முதல் மக்களுக்கு சென்று சேர்வது வரை அனைத்தும் கண்காணிக்க முடியும். இதனால் மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என அரசு தெரிவித்துள்ளது.