Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நிலையம் அருகே காய்கறி வியாபாரம்…. போலீசாரின் அதிர்ச்சி செயலால் 2 கால்களையும் இழந்த வாலிபர்…..!!!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்யாண்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ஏராளமான நபர்கள் சாலையோரம் கடைகள் அமைத்து பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது.

மேலும் இந்த வியாபாரிகளால் வாகனங்கள் சென்று வருவதற்கும் பயணிகள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் கல்யாண்பூர் அருகில் ஜி.வி ரோடு என்ற பகுதியில் சாலையோரம் உள்ள கடைகளை அகற்றும் பணி தொடங்கியது. இந்த நிலையில் இர்பான் என்ற வியாபாரி ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள சாலையில் காய்கறிகள் வியாபாரம் செய்தார். இர்பானின் கடையையும் போலீசார் அகற்றினர்.

அதோடு கடையில் இருந்த காய்கறிகள் மற்றும் தராசு, படிக்கற்கள் போன்ற பொருட்களை போலீசார் அருகில் உள்ள தண்டவாளத்தில் வீசி உள்ளார்கள். இதனால் இர்பான் தண்டவாளத்தில் விழுந்த காய்கறிகள் மற்றும் தராசு, படிக்கற்கள் போன்ற பொருட்களை எடுப்பதற்காக சென்றார். அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த ரயில் இர்பான் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இர்பானின் இரண்டு கால்களும் பறிபோனது. இவரின் இரண்டு கால்களும் துண்டானதால் வலி தாங்க முடியாமல் இர்பான் அலறி துடித்தார்.

இதனையடுத்து அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது பற்றி இர்பான் தந்தை சலீம் அகமது கூறுகையில், எனது மகனுக்கு 20 வயது தான் ஆகிறது. இப்போது இரண்டு கால்களையும் இழந்து விட்டதாக கதறி துடித்து அழுகிறான் என்று வேதனையோடு கூறியுள்ளார். மேலும் போலீசாரின் இந்த செயலால் வாலிபர் கால்களை இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |