FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தற்போது கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் போட்டியை கண்டுகழித்து வருகிறார்கள். அதன் பிறகு இந்த கால்பந்து போட்டிகளின் இடையே வீரர்கள் வாய் கொப்பளித்து மைதானத்திலேயே துப்புகிறார்கள். சக வீரர்கள் விளையாடும் இடம் என்று கூட பாராமல் கொப்பளித்து துப்பும் இந்த வீரர்களின் நடவடிக்கை தவறான நடத்தை என்றும் நீங்கள் யோசிக்கலாம்.
ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற கால்பந்து வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கு இடையே வாய் கொப்பளித்து மைதானத்தில் துப்புவதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறதாம். சாதாரணமாக சாப்பிட்டு வாய் கொப்பளித்தால் உணவு துணுக்குகளின்றி வாய் சுத்தமாகும். விளையாடும்போது ஏன் அப்படி செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்கள் அனைவருக்குள்ளும் இருக்கும். நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் எச்சில் கலக்கும் புரதத்தின் அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
குறிப்பாக எம்யூசி பைஃபி போன்ற திரவங்கள் கலப்பதால் எச்சிலின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதனால் அதனை விழுங்குவதற்கு அதிக சிரமம் ஆகிறது. குறிப்பாக கால்பந்து மற்றும் ஹாக்கி போன்ற மைதானங்த்தில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிற போது வீரர்களின் உடல் அதிதீவிரமானதாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இந்த அடர்த்தி மிகுந்த எச்சிலை விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தான் மைதானத்தில் கொப்பளித்து துப்புவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கால்பந்து போன்ற விளையாட்டு மைதானங்கள் மிகப்பெரியது. இதில் வீரர்கள் எச்சில் துப்புவதற்கு பவுண்டரி லைனை நோக்கி செல்ல முடியாது என்பதால் தான் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதுவே டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டு மைதானங்களில் எச்சில் துப்பினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
உடல் அதிகம் இயங்கும்போது நாம் வாய்வழியே மூச்சுவிட தொடங்குகிறோம். அந்த சமயத்தில் அதிக காற்றோட்டத்தின் காரணமாக வாய் வறண்டு போகும். இதைத் தடுப்பதற்காக தான் எம்யூசி மற்றும் பைஃபி போன்ற அடர் துருவங்கள் எச்சிலில் ஊறுகிறதாம். அதே சமயம் அடிக்கடி தொண்டை வரை கொப்பளித்து துப்பினால் மட்டுமே வீரர்கள் இயல்பாக உணர முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.