ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் முன்னாள் பிரதமரான குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் இருந்து வருகிறார். இதனையடுத்து நேற்று ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் சந்தேகிக்கப்படும் விதமான பயங்கரவாதிகள் சிலர் பர்தா அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Categories
மசூதிக்குள் நுழைந்த பயங்கராவாதிகள்… முன்னாள் பிரதமர் மீது தாக்குதல்.. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!!!
