கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்..
அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் ஆடியோ மூலமாக அறிவித்துள்ளார். அதிமுக என்ற பெயரில் சுய நலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனி சாமியும், ஓ பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர். திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன், விரைவில் நல்ல முடிவை எடுப்பேன். ஜெயலலிதாவின் உயிரை விட பதவி தான் முக்கியம் என பன்னீரும், பழனிசாமியும் இருந்தனர். அரசியலை விட்டு விலக மாட்டேன் ஆனால் துரோகிகளோடு சேர்ந்து ஒரு நாளும் பணியாற்ற மாட்டேன் என்று அவர் ஆடியோவில் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவை செல்வராஜ் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கோவை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிக்கப்பட்டு மோகனை நியமனம் செய்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கோவை செல்வராஜ் விடுவிப்பு: ஓபிஎஸ் pic.twitter.com/uV18QM16xC
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) December 3, 2022