வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி செயலாளர் வைத்த பிறந்த நாள் கோரிக்கை வேண்டுகோள் என்பது ஒன்றே ஒன்றுதான். கடன் வழங்கி நிகழ்ச்சி செய்வதை காட்டிலும், சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சின்சியரா பண்ணுங்க, நம்முடைய மக்களுக்கு பயனுள்ளதாக பண்ணுங்க என்ற வேண்டுகோளை ஏற்று,
இன்றைக்கு அதிலிருந்து சிறிதும் தடம் பிறழாமல் நம்முடைய அண்ணன் தாயகம் கவி அவர்கள் மிக எழுச்சியோடு நம்முடைய பண்பாட்டை நிலை நிறுத்துகின்ற, ஒரு போட்டியை காலையிலிருந்து தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார். முதலில் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை உங்களுடைய அனைவரின் சார்பாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழக பொது நிறுவனத்தின் சார்பாக விளையாட்டு துறைக்கு என்று ஒதுக்கப்படுகின்ற மூன்று சதவீதத்தில், சிலம்பாட்ட போட்டி என்பது இடம்பெறாமல் இருந்தது. இன்றைக்கு அதை இடம்பெறச் செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.
ஒன்றிய அரசின் ”கேலோ இந்தியா” என்கின்ற திட்டத்தின் மூலமாக சிலம்பாட்டத்திற்கு என்று அங்கீகாரம் இல்லாமல் இருந்தபோது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக சிலம்பாட்டமும் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு இருக்கின்ற பெருமையாக நன்றியுணர்வோடு முதலமைச்சரை நினைவு கூறுகின்ற நிகழ்வாக இந்த நிகழ்வை நான் பார்க்கின்றேன்.
உங்களை முழுமையாக இந்த பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டு, இன்றைக்கு என்னுடைய இளைஞரணியுடைய செயலாளரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றைக்கு இந்த போட்டியில் கலந்து கொண்டு இருக்கிறவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.