Categories
மாநில செய்திகள்

இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, தமிழகத்தில் இன்று மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை செங்கல்பட்டு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஏனென்றால் இன்னும் 6 நாட்கள் இருக்கின்ற நிலையில் காற்றழுத்த  தாழ்வு நிலை நன்றாகவே உருவாகி வருகிறது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர், நாகை முதல் சென்னை – நெல்லூர் இடையே தமிழக கடற்கரையை நெருங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணித்ததில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய மழையை காணாமல் போகலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாதத்தின் இரண்டாவது வாரம் மழை தீவிரமாக இருக்கும் என தெரிகிறது எனகூறியுள்ளார்.

Categories

Tech |