கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு நாளை எழுத்து தேர்வு நடக்கின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தாசில்தார்கள் மூலம் கூறாய்வு செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக நாளை எழுத்து தேர்வு மாவட்டத்தில் 10 இடங்களில் நடைபெறுகின்றது. அவை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் என மூன்று மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகின்றது.
பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, ஒரப்பம் சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த தேர்வு நடக்கின்றது. மேலும் போச்சம்பள்ளி தாலுக்காவில் ஜம்பு குட்டப்பட்டி ராசி நகர் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் அதியமான் பொறியியல் கல்லூரியிலும் தேர்வு நடைபெற இருக்கின்றது. இணையவழியில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் பங்கேற்க குறுஞ்செய்தி அனுப்பப்படுகின்றது. அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வில் பங்கேற்கலாம். விதிமுறைகளை பின்பற்றி தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.