டெல்லியில் இருந்து கான்பூர் பகுதிக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஹரிஷ்கேஷ் குமார் என்ற பயணி ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் பிரக்யாராஜ் பகுதி அருகே சென்று கொண்டிருந்தத போது திடீரென வெளியிலிருந்து ஒரு கம்பி ரயிலின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹரிகேஷ்குமாரின் கழுத்தில் பயங்கரமாக பாய்ந்தது. இந்த விபத்தில் ஹரிகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர்.
அதன் பிறகு ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பயணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் கம்பி கிடந்திருக்கலாம் என்றும், அந்த கம்பியில் ரயில் சக்கரம் பதிந்த போது திடீரென உள்ளே வந்து பயணியின் உயிரை பறித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.