இந்தியாவில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி நிலையான வருமானத்தை பெற விரும்புபவர் களுக்காக மத்திய அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு அடல் யோஜனா பென்சன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம்.
இது ஒரு பாதுகாப்பான திட்டம் என்பதால் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், மொபைல் எண் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் 18 வயது நிரம்பிய ஒருவர் இணைந்து கொண்டால் அவருக்கு 60 வயது ஆகும்போது பென்ஷன் கிடைக்க ஆரம்பிக்கும். 18 வயதிலிருந்து மாதம் தோறும் 210 செலுத்தினால் 60 வயது ஆகும்போது ஓய்வூதியமாக மாதம் 5000 கிடைக்கும். அதன் பிறகு தினந்தோறும் வெறும் 7 ரூபாய் செலுத்தினாலும் மாதம் 5000 பென்ஷன் கிடைக்கும்.
அதன் பிறகு மாதந்தோறும் 42 ரூபாய் செலுத்தினால் 1000 ரூபாயும், மாதந்தோறும் 82 ரூபாய் செலுத்தினால் 2000 ரூபாயும், மாதம் தோறும் 126 ரூபாய் செலுத்தினால் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால் 4000 ரூபாயும் பென்ஷன் ஆக கிடைக்கும். மேலும் திட்டத்தில் இணைந்தவர்கள் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே ஒருவேளை இறந்து விட்டால் அவருடைய மனைவி அல்லது வாரிசுதாரருக்கு பணம் கிடைக்கும். ஒருவேளை அவர்கள் மொத்தமாக பணத்தை எடுத்துக் கொள்ள விரும்பினாலும் கூட எடுத்துக் கொள்ளலாம்.