Categories
தேசிய செய்திகள்

ஜீவன் பிரமான் போர்ட்டல்: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

ஜீவன் பிரமான் சான்றிதழ் என்பது இந்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் ஆகும். இது ஆதார் அடிப்படையிலான டிஜிட்டல் சேவை ஆகும். ஓய்வூதியதாரர்கள் வருடந்தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த சான்றிதழ் அவர்கள் உயிருடன் இருகின்றனர் என்பதை உறுதிசெய்யும் சான்று ஆகும். ஜீவன் பிரமான் போர்ட்டல் வாயிலாக ஆயுள்சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி மற்றும் அதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

# ஆதார் எண்

# ஓய்வூதியம் செலுத்துவதற்கான உத்தரவு

# வங்கிக் கணக்கு

# வங்கிப் பெயர்

# கைபேசி எண்.

ஜீவன் பிரமான் போர்ட்டல் வாயிலாக ஆயுள் சான்றிதழை உருவாக்குவது எப்படி?

# ஓய்வூதியதாரர் https://jeevanpramaan.gov.in/app/download & கிளையன்ட் புரோகிராமிலிருந்து டிஎல்சி-ஐ உருவாக்கி, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போன்/டேப்லெட் (அ) விண்டோஸ் பிசி/லேப்டாப்பில் ஜெபி செயலியை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.

# டவுன்லோடு செய்தபின், ஓய்வூதியதாரர் ஆதார்எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளீட்டு ஆன்லைன் விண்ணப்பப் படிவம், மென் பொருள் தொகுதியில் வழங்கப்பட்டOTP-ஐ பெறுவார்.

# OTP-ஐ உள்ளிட்டதும் திரையில் பெயர் & மின் அஞ்சல் ஐடியை உள்ளிட்டு “ஸ்கேன் ஃபிங்கர்” என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.

# கைரேகை ஸ்கேனரில் கை ரேகையை ஸ்கேன் செய்ய வேண்டும் (அ) பிசி/மொபைல்/டேப்பில் இணைக்கப்பட்டுள்ள ஐரிஸ் ஸ்கேனரில் கண்ணை ஸ்கேன் செய்யவும்.

# கைரேகை/கண் ரேகை அங்கீகரிக்கப்பட்டவுடன், கணினி “டிவைஸ் ரிஜிஸ்ட்ரேஷன் சக்ஸஸ்” என திரையில் தெரியும். தற்போது சரி என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.

# சான்றிதழ் உருவாக்கத்திற்கு ஆதார் மற்றும் மொபைல்எண்ணை உள்ளிட்டு பிறகு OTP-ஐ நிரப்பவேண்டும்.

# பின் திரையில் ஓய்வூதியதாரர் பெயர், பிபிஓ எண், ஓய்வூதியத்தின் வகை, அனுமதி வழங்கும் அதிகாரத்தின் பெயர், விநியோகிக்கும் முகமை, மின் அஞ்சல் மற்றும் வங்கிக்கணக்கு எண் ஆகிய தகவலை உள்ளிடவேண்டும்.

# அடுத்ததாக “ஸ்கேன் ஃபிங்கர்” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவை விரல் மற்றும் கருவிழி ஸ்கேனிங் செயல்முறையினைத் துவங்கும்.

# அதனை தொடர்ந்து ஓய்வூதியதாரரின் ஆயுள் சான்றிதழ் திரையில் காண்பிக்கப்பட்டு ஓய்வூதியதாரரின் மொபைல் போனுக்கு SMS அனுப்பப்டும்.

Categories

Tech |