Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மர்மம்” 1 1/2 ஆண்டுக்கு முன்…. பின்….. 2 சம்பவம்….. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

தேனி அருகே பரமசிவன் மலைக்கோவில் பின்  அடையாளம் தெரியாத ஆணின் தலை மற்றும் துண்டாக்கப்பட்ட நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டத்தில் பரமசிவன் மலை கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள  கிரிவலப்பாதையில் நாள்தோறும் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வர். அப்போது அப்பகுதி நாடக மேடை ஒன்றின் வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது சிலருக்கு துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து நாளுக்கு நாள் துர்நாற்றம் வீச சந்தேகமடைந்த அவர்கள் நாடக மேடையை சுற்றி சோதனையிட்டனர். அப்போது நாடக மேடைக்கு பின்புறம் மனித உடலின் தலை மட்டும் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. அதனை பார்த்ததும் பொதுமக்கள் காவல்நிலையத்தில்  தகவல் தெரிவித்தனர்.

பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் தலை 35 வயது மதிக்க கூடியதாக இருக்கலாம் என்றும், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை என்று தெரிவித்தனர்.

ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதே நாடக மேடைக்கு அருகே குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஊழியர் செல்வராஜ் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது. அதுகுறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,  குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. தற்போது மற்றொரு நபர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |