தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு குறித்து அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளதாகவும் இந்த தொகை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை தமிழகத்தில் 14,84,582 ரேஷன் அட்டைதாரர்கள் இணைக்காமல் இருப்பதாகவும் இவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம் தற்போது வங்கி கணக்கு என்னுடன் ஆதார் இணைக்க மட்டும் அதிகாரிக்கு அறிவுறுத்தினால் போதும் எனவும் விவரங்களை சேகரிக்க வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கி கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.