Categories
உலக செய்திகள்

ரோட்டில் பிச்சை எடுக்கும் நபருக்கு 5 கோடி மதிப்பில் சொத்து…. மாதம் லட்சங்களில் வருமானம்…. வியப்பூட்டும் தகவல்….!!!!!

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இது ஓரளவில் உண்மைதான். ஆனால் பிச்சை எடுத்து வரும் ஒருவரிடம் சுமார் 5 கோடி மதிப்பிலான வீடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான். அதாவது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோம் என்பவர் பிச்சை எடுத்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதிலிருந்து படிப்பு நன்றாக வராவிட்டாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் உயர் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் டோம் அதிக அளவில் போதை பொருளுக்கு அடிமையானதால் படிப்பை தொடர முடியாமல் போனது. அதன்பிறகு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்த டோம் 7 வருடங்கள் போதைப் பழக்கம் எதுவும் இல்லாமல் இருந்தார். ஆனால் வெளியே வந்ததும் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

இவருக்கு திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த போது டோமின் தந்தை இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி மதிப்பிலான வீட்டை அவருக்கு வாங்கி கொடுத்துள்ளார். இந்த வீட்டின் மூலம் சுமார் 1.3 லட்சம் வாடகையாக டோமுக்கு கிடைக்கிறது. இந்த பணம் மொத்தத்தையும் டோம் போதை பொருள் வாங்குவதற்கு செலவழித்து விடுவார் என்று கூறியுள்ளார். அதன் பிறகு டோமுக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பதால் குடும்பத்தினரும் அவரை ஒதுக்கி விட்டதால் தற்போது தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எப்படியாவது போதை பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வந்து சாதாரண மனிதர்களைப் போன்று தானும் வாழ வேண்டும் என்று தான் டோம் விருப்பப்படுகிறார். மேலும் மனக்கட்டுப்பாடு தான் பெரிய கட்டுப்பாடு என்றும் உங்களால் கண்டிப்பாக போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் எனவும் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Categories

Tech |