தமிழகத்தில் விவசாயிகளுக்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனியாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் கூடுதலாக 5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மானியத்துடன் சேர்த்து கூடுதலாக 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதன் பிறகு பசுமை குடில் அல்லது நிழல்வலைக்குடில் அமைப்பதற்கு கூடுதலாக 70 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இதனையடுத்து வேளாண்மை பொறியியல் சார்ந்த திட்டங்களுக்கு 70% கூடுதல் மானியம் வழங்கப்படும்.
அதன்படி வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கு கூடுதலாக 70% மானியமும், சூரிய கூடார உலர்த்திகள் அமைப்பதற்கு கூடுதலாக 60% மானியமும், மதிப்பு கூட்டு இயந்திரங்களுக்கு 60% மானியமும், வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டும் இயந்திர சேவை மையம் அமைப்பதற்கு 70% மானியமும், சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் அமைப்பதற்கு கூடுதலாக 90% மானியமும் வழங்கப்படும்.
இந்த கூடுதல் மானியத்தை பெறுவதற்கு வருவாய் துறையினால் வழங்கப்படும் ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் சிறு, குறு சான்றிதழ்களை விவசாயிகள் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி, https://www.tnagrisnet.in.gov.in, https://tnhortivulture.tn.gov.in, https://aed.tn.gov.in போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.