கொரோனா வைரசால் ஆஸ்திரேலிய நாட்டில் டாய்லெட் பேப்பருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து NT News என்ற செய்திதாள் நிறுவனம் கூடுதல் பக்கங்களை அச்சிட்டு மக்களுக்கு உதவியுள்ளது
சீனாவின் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா 109 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பீதியில் உறைந்திருக்கும் அந்நாட்டு மக்கள் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களையெல்லாம் வாங்கி வீட்டில் குவித்து வருகின்றனர். அதனால் ஆஸ்திரேலியாவில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக காட்சியளிக்கின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவின் வூகான் உள்ளிட்ட நகரங்கள் சீல் வைக்கப்பட்டது போல எங்கே ஆஸ்திரேலிய நகரங்களும் சீல் வைக்கப்பட்டு விடுமோ என்ற ஒரு வித பயத்தின் காரணமாகவே மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை போட்டி போட்டுகொண்டு வாங்கி குவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல பொருட்களுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு நிலவியுள்ளது.
அதில், டாய்லெட் டிஷ்யூ பேப்பரும் ஓன்று. ஆம், டாய்லெட் டிஷ்யூ பேப்பருக்கு அந்நாட்டில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. சமீபத்தில் கூட அங்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டாய்லெட் பேப்பர் பண்டலை வாங்க ஏற்பட்ட போட்டியில், இரு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குடுமிப்பிடி சண்டையே வந்து விட்டது. பின்னர் போலீஸ் வந்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த The NT News என்ற செய்திதாள் நிறுவனம், தங்களது நியூஸ்பேப்பரில் கூடுதலாக 4 பக்கங்களை அச்சிட்டு விற்று வருகிறது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், மக்களே பிரிண்ட் எதுவும் செய்யப்படாத இந்த கூடுதல் பக்கங்களை நங்கள் உங்களுக்காகவே அச்சிட்டுளோம். எங்கள் வாசகர்களாகிய உங்களுக்கு டாய்லெட் டிஷ்யூ பேப்பர் பற்றாக்குறை இருப்பது தெரிந்ததும் இந்த ஏற்பாடை செய்துள்ளோம்.
ஆகவே அச்சிடப்படாத இந்த கூடுதல் பக்கங்களை டாய்லெட் டிஸ்யூ பேப்பராக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ட்விட்டரில் வீடியோ ஒன்றையும் NT News நிறுவனம் வெளியிட்டுள்ளது. செய்தி நிறுவனத்தின் இந்த செயலை அந்நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். அனைவருமே இது மிகவும் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
YES, WE ACTUALLY DID PRINT IT #toiletpapercrisis pic.twitter.com/jusP50ojYu
— The NT News (@TheNTNews) March 4, 2020
GOLD!! https://t.co/xWn4o8uKZd
— Joe Hockey (@JoeHockey) March 9, 2020
AAAANNNDDD HERE IS WHAT THE PAGES LOOK LIKE 👇 pic.twitter.com/107JbNepUr
— The NT News (@TheNTNews) March 4, 2020