Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நடந்துள்ளது.

இது தொடர்பாக மாண்டியா காவல்துறையினர் கூறியதாவது, அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருடைய மனைவி உஸ்னாகவுசர் (30) கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கு முன்பு உஸ்னாகவுசர் தனது மகன் ஹாரிஸ் (7), மகள்கள் அல்லிசா (4) மற்றும் அனம் பாத்திமா (2) போன்றோருக்கு விஷம் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று (டிச..2) காலையில் 4 பேரும் உயிரிழந்ததை பார்த்து அகில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Categories

Tech |