Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த  தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடையக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும், டிசம்பர் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதன் பிறகு டிசம்பர் 4, 6-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் டிசம்பர் 6-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அல்லது சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனையடுத்து டிசம்பர் 4-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 5-ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், டிசம்பர் 6-ம் தேதி தென் வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |