Categories
தேசிய செய்திகள்

மாநகராட்சி தேர்தல்…. காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை…. வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் 250 வார்டுகளுக்கு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதல் 5.30 மணி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் தேர்தலை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையானது இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 6 மணி முதல் அனைத்து ரயில்களும் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும் மற்ற நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் போல் வழக்கம்படி ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |