Categories
மாநில செய்திகள்

“போதைப் பொருள் யூஸ் பண்ணணு எழுதி தா”…. மாணவனை கொடுமை செய்த ஆசிரியர்?…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்…..!!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்னநீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 மகன்கள் கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லைநாடார் பள்ளியில் 12ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் இப்போது வரை இருவரும் அப்பள்ளியில் தான் படித்து வருவதாக தெரிகிறது. இதில் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும்போது கொஞ்ச நேரம் மேசையில் படுத்து இருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் அவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு ஆசிரியர் தன்னை அடித்தது பற்றி தர்ஷன் பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதன்பின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் முறையிட்டு இருக்கின்றனர். பின் 2 நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு நேற்று வழக்கம் போல் மூத்தமகன் கவின்குமார் பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன், மாணவன் கவின் குமாரை அழைத்து நீ பள்ளியில் போதை வாஸ்துக்களை பயன்படுத்துகிறாய் எனக்கூறி சக மாணவ-மாணவிகள் முன்பு சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக அடித்து, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு கையெழுத்து இட சொல்லியுள்ளார். பின் கவின் குமாரின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர். இந்நிலையில், இன்று காலை மூத்தமகன் கவின் குமார் வழக்கம்போல பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் உள்ளே இருக்கும் குளியலறைக்கு சென்று உள்ளார்.

குளிக்க சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் கவின் குமார் வெளியே வராததால், அறைகதவை தந்தை மகேஷ் தட்டியுள்ளார். அதன்பின் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அறை ஜன்னல் வழியாக பார்த்து உள்ளனர். அப்போது மூத்தமகன் கவின் குமார் வேட்டியால் தூக்கில் தொங்கி இருப்பதை கண்டு தந்தை மகேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மாணவனை மீட்டு நீலாங்கரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் கவின்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மாணவனின் தந்தை கூறியிருப்பதாவது “கவின் குமாரும் அவரது தம்பியும் ஒரே பள்ளியில் படித்துவந்தனர். சென்ற வாரம் கவின் குமார் தம்பி பாடம் நடத்தும்போது தூங்கினார். இதன் காரணமாக ஆசிரியர் ஒருவர் மாணவனை அடித்ததால் நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். அதன்பின் கவின் குமார் 2 நாட்களுக்கு பின் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரான வெங்கடேசன் என்பவர் கவின் குமார் பள்ளியில் போதைவஸ்துகளை பயன்படுத்தியதாக கடிதம் ஒன்றை எழுதி தர கூறி வற்புறுத்தி, கவின் குமாரை அடித்துள்ளார்.

மேலும் உடற்பயிற்சி ஆசிரியர் மாணவனின் சட்டையை பிடித்து இழுத்து சென்று அடித்து அவமானபடுத்தியதால் கவின் குமார் தற்கொலை செய்து கொண்டார்” என்று கூறியுள்ளார். தன் இளையமகனை அடித்தது பற்றி கேட்டதற்கு தன் பெரிய மகன் மீது பொய்யான புகாரை கூறி அடித்ததாகவும் தந்தை கூறினார். இதனால் அந்த பள்ளி நிர்வாகம் மற்றும் உடற் பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து இறந்த மாணவனின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால், எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படமால் இருக்க பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் சைதாப்பேட்டை சரக உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசில் தலைமையில் பள்ளியின் முன் சுமார் 50க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |