கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த யானையின் முன்பாக நின்று தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தும்போது திடீரென யானை அருகில் இருந்த பாகனை தலைகீழாக தூக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் அங்கிருந்து தலை தெரிக்க ஓடினர்.
அதன் பிறகு பாகனின் வேட்டியை மட்டும் யானை உருவிய நிலையில், காயமின்றி அந்த பாகன் தப்பினார். இந்நிலையில் யானையின் மீது அமர்ந்திருந்த பாகன் யானையை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தி அங்கு இருந்த ஒரு கயிற்றில் கட்டி வைத்தார். இச்சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ள நிலையில், போட்டோ சூட் நடத்திய தம்பதி தற்போது தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் அது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவானது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram