பிரபல நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரேசில் நாட்டில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாண்டா கேடரினா மாகாணத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளின் மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.