தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடை வாயிலாக விநியோகம் செய்கிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களை சில பேர் முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் போன்றோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல், பதுக்கல் குறித்த தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 21/11/2022 முதல் 27/11/2022 வரை ஒரு வார காலத்தில் கள்ளச்ச ந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூபாய். 11,73,395 மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. அத்துடன் மண்ணெண்ணெய் 87 லிட்டர், துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி குற்றச்செயலில் ஈடுபட்ட 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.