ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ட்விட்டர் நீக்கப்படுவதாக வெளியான தகவலை தொடர்ந்து எலான் மஸ்க் அந்நிறுவனத்தின் CEO-வை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்க போகிறோம் என்று தெரிவித்தது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ட்விட்டரை அதன் பயனர்கள் அணுகுவதில் சிக்கல் உண்டாகும். இது பற்றி எலான் மாஸ்க் தெரிவித்ததாவது, ஆப்பிள் அல்லது google என்று எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டரை நீக்கினால் புதிதாக ஸ்மார்ட்போனை உருவாக்குவேன் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
Thanks @tim_cook for taking me around Apple’s beautiful HQ pic.twitter.com/xjo4g306gR
— Elon Musk (@elonmusk) November 30, 2022
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று எலான் மஸ்க் ஆப்பிள் நிறுவன தலைமை அலுவலகத்தில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குப்பை சந்தித்து பேசியிருக்கிறார். அதன் பிறகு, எலான் மஸ்க் தெரிவித்ததாவது, எங்களின் பேச்சு வார்த்தை நன்றாக அமைந்தது. எங்களுக்கிடையே தவறான புரிதல்கள் இருந்தது.
அவை நீங்கிவிட்டது. ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து ட்விட்டரை அகற்றுவது பற்றி அவர்கள் பரிசீலனை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.