ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்த 56 வயதான ட்ராவல்ஸ் பால் என்பவருக்கு அமெரிக்க அதிபரை மிரட்டிய குற்றத்திற்காக 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் உள்ளூர் நீதிபதிகள், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்கள் மற்றும் ஒரு வித வெள்ளை தாள் போன்ற பொருள் அடங்கிய பல அச்சுறுத்தல் கடிதம் போன்றவற்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இவர் மற்றொரு நபரின் பெயரை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கடிதங்களை அனுப்பியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 7,500 அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என தலைமை அமெரிக்க மாவட்ட நீதிபதி மார்க் ட்ரெட்வெல் உத்தரவிட்டுள்ளார்.