நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து “அவள் என் மகளே இல்லை, வளர்ப்பு மகள் தான்” என ராஜ்கிரண் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ராஜ்கிரணின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதாவது, முனீஷ் ராஜா தரப்பு பணம் கேட்டு தொல்லை செய்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்பின் அது தொடர்பாக முனிஸ் ராஜா பேசியதாவது, “பிரியா ராஜ்கிரணின் மகள் இல்லை. ராஜ்கிரணுக்கு மனைவியாகவுள்ள பத்மஜாவுக்கும்,வேறு ஒருவருக்கும் பிறந்த குழந்தைதான் பிரியா. பிரியா குழந்தையாக இருக்கும்போதே ராஜ்கிரணுடன் அவர் வாழ துவங்கி இருக்கிறார்” என தெரிவித்துள்ளார். பின் பிரியா கூறியதாவது “என் நகைகள் அந்த வீட்டில் உள்ளது. அது என் அப்பா தனக்கு கொடுத்தது. அதனை கேட்டதற்கு தற்போது பொய் புகாரளித்து இருக்கிறார். இது தொடர்பாக மீடியாவை சந்திக்கபோகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.