சிவமெக்காவில் நேற்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடகத்தின் வக்பு வாரிய தலைவர் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கும் திட்டம் தற்போது இல்லை.
மேலும் ஹிஜாப் பிரச்சனைக்கு பின் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்வது உண்மை இல்லை. ஏனென்றால் முஸ்லிம் பெண்களின் வருகை வழக்கம் போல தான் இருக்கிறது. மேலும் கர்நாடகாவில் படிப்பறிவு அதிகரித்து சிறுபான்மையின பெண் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்று வருகின்றார்கள். அதனால் இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.