தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (2.12.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் குமார்நகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குமாரனந்தபுரம் மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதி, காட்டன்மில்ரோடு, சக்தி தியேட்டர் ரோடு, தளிஞ்சிகாடு, நாகமரத்தோட்டம் பகுதியில் மின்தடை ஏற்படும் என திருப்பூர் மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை
சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படும். கிண்டி பகுதி: ராஜ்பவன் டி.என்.எச்.பி.பகுதி, பவானி நகர், அம்பேத்கர் நகர், காமராஜர் தெரு கிண்டி & பரங்கிமலை மவுண்ட் பூந்தமல்லி ஒரு பகுதி, ராணுவ காலனி, சுந்தர் நகர் முகலிவாக்கம் டி.வி.நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு நந்தம்பாக்கம் கோலபாக்கம் கிராமம், பிரதீப் மருத்துவமனை ஆலந்தூர் எம்.கே.என்.ரோடு, தர்மராஜா கோயில் தெரு மடிப்பாக்கம் அன்னை தெரசா நகர், சங்கர்தாஸ் தெரு நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர், ராமசந்திரா நகர், காமாட்சி நகர் டி.ஜி.நகர் தில்லை கங்கா தெரு, நங்கநல்லூர் புழுதிவாக்கம் மேடவாக்கம் மெயின் ரோடு, எஸ்.ஐ.பி.காலனி, ஏ.ஜி.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.