Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

மாஸ் காட்டும் மஸ்க்…! மனித மூளையின் எண்ணங்களை கண்டறிய…. வருகிறது புதிய தொழில்நுட்பம்..!!!!

மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவ பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரலிங்க், ட்விட்டர் என்று வெவ்வேறு துறைகளை தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம், புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்ற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருக்கி உள்ளதாகவும், அதற்கான மனித சோதனை 6 மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது மனித மூளையில் உள்ள எண்ணங்களை அறிந்துகொள்ள உதவும்.

இந்த ஆய்வு தொடர்பான விஷயத்தில் தன் நிறுவன ஊழியர்கள் மீதே அதிருப்தியில் உள்ள எலான் மஸ்க், தனக்கு போட்டியாகவுள்ள சிங்க்ரானை – அணுகியுள்ளார். சிங்கிரான் நிறுவனம் ஏற்கான்வே 4 பேரை இந்த சோதனைக்கு உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |