Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 10.03.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

10-03-2020, மாசி 27, செவ்வாய்க்கிழமை,

பிரதமை திதி இரவு 07.23 வரை பின்பு தேய்பிறை துதியை.

உத்திரம் நட்சத்திரம் இரவு 10.01 வரை பின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் இரவு 10.01 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2. ஜீவன் – 1.

முருகவழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எமகண்டம் காலை 09.00-10.30,

குளிகன்மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.


இன்றைய ராசிப்பலன் – 10.03.2020

மேஷம்

இன்று பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். பணியில் தகுதிக்கு தகுந்தார்போல் பணிஉயர்வு கிடைக்கும். தொழில் தொடர்பாக பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று வரவை விட செலவுகள் அதிகமாக ஏற்படும். தொழிலில் சற்று மந்தமான நிலை காணப்படும். பணியில் சக பணியாளர்களால் சிறிய மனவருத்தம் ஏற்படும். மேலதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை நடக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை பயக்கும்.

மிதுனம்

இன்று திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். உறவினர்கள் மூலம் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணியில் அலைச்சல் இருந்தாலும் நன்மை நடக்கும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று புத்துணர்ச்சியுடன் அனைத்து செயல்களிலும் செயல்படுவீர்கள். பிரச்சினைகளுக்கு நண்பர்களின் ஆலோசனை தீர்வளிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். திருமணம் போன்ற சுப காரியங்களில் நல்ல பலனை பெற முடியும்.

சிம்மம்

இன்று பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களில் முன்னேற்றமான சூழல் உருவாகும். தொழிலில் வெளியூர் பயணங்கள் மூலம் நன்மை நடக்கும். கடன் தொல்லைகள் அகலும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும்.

கன்னி

இன்று பணவரவு அதிக அளவில் இருக்கும். இல்லத்தில் பெரியவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் பெயர் மற்றும் செல்வாக்கு மேலோங்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். பணிச்சுமை சற்று குறைவடையும்.

துலாம்

இன்று பிள்ளைகள் மூலம் மன வருத்தங்கள் ஏற்ப்படும். செய்யும் செயல்களில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதில் லாபம் இருக்க வாய்ப்பு குறைவு ஆனால் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் குறைவடையும். விட்டுக்கொடுத்து செல்வது நன்மை பயக்கும்.

விருச்சிகம்

இன்று உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும் பிள்ளைகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லம் தொழில் தொடர்பாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடி வரும்.

தனுசு

இன்று செய்யும் அழைத்து செயலிலும் புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இல்லத்தில் இருக்கும். பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் பெருகும். வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் அகன்றுவிடும். நண்பர்களை சந்திப்பது மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

இன்று இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். செலவுகளை கட்டுக்குள் அடக்கி கடன் வாங்கக் கூடிய சூழல் உருவாகும். பணியில் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் முக்கியம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.

கும்பம்

இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் உங்களைத் தேடிவந்து சேரும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் மந்தமான சூழல் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை.

மீனம்

இந்த தொழில் தொடர்பாக பொருளாதாரம் சிறந்த அளவில் இருக்கும் பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கப்பெறும். பணியில் இருந்த போட்டி பொறாமைகளும் பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். மனநிம்மதி அதிகரிக்கும்.

Categories

Tech |