தனுஷின் விவாகரத்திற்கு பிரபல நடிகை தான் காரணம் என செய்திகள் வெளியாகி வருகின்றது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து சென்ற 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் சென்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தார்கள். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். இதனால் இவர்கள் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என பலரும் எண்ணிய நிலையில் அது நடக்கவில்லை.
தற்போது இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். தனுஷ் தற்போது வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அடுத்து தனுஷ் அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க உள்ளார். அதற்கு நடிகை சாய் பல்லவி தான் சிபாரிசு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தனுஷ் உடன் சாய்பல்லவி கிசுகிசுக்கப்பட்டு வருகின்றார். தனுஷின் விவாகரத்திற்கு சாய் பல்லவி தான் காரணமாக இருப்பாரோ என சிலர் பேசி வருகின்றார்கள். இதனால் தனுசு ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றார்கள் குறிப்பிடத்தக்கது.