Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2030-க்குள் வருடம் தோறும் 20 கோடி பேர்… உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒவ்வொரு வருடமும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்னும் தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களாவன, வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் வருடம் தோறும் 16 கோடி முதல் 20 கோடி பேர் இந்தியாவில் கடுமையான  வெப்ப அலைகளுக்கு ஆளாகின்ற அபாயமான காலகட்டம் உள்ளது. மேலும் இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் 2040-ஆம் ஆண்டு வாக்கில் மாற்றுமுறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இடங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக 1.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படும். பசுமை குடில் வாயுக்கள் அளவையும் குறிப்பிடதகுந்த அளவிற்கு குறைத்துக் கொள்ள முடியும். அதன் மூலமாக 37 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். அதேபோல் போக்குவரத்தின் போது வெப்பத்தால் உணவு இழப்பு வருடத்திற்கு 13 பில்லியன் டாலர் அளவு ஏற்படுகிறது. இந்த அளவானது தற்போதைய அளவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 2037-ஆம் வருடத்திற்குள் குளிரூட்டும் தேவை 8 மடங்காக உயர்ந்து  ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு ஏசி எந்திரம் தேவை ஏற்படுகிறது. இதனால் பசுமை குடில் வாயுக்கள் உமிழ்வு அடுத்த 20 ஆண்டுகளில் 435% உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |