நீண்ட இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகர் வடிவேலு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. அத்துடன் இப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.