அறிமுக டிரைக்டர் ஹேமந்த் இயக்கி இருக்கும் காரி திரைப்படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான பார்வதி அருண் இப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அ மைத்துள்ளார். அத்துடன் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
சகோதரர் @SasikumarDir, இயக்குநர் @erasaravanan இணையும் #நந்தன் #Nandhan படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ வெளியிடுவதில் மகிழ்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். pic.twitter.com/Y3k8AVGg98
— Udhay (@Udhaystalin) November 30, 2022
இந்த படம் சென்ற நவம்பர் 25ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பின் நடிகர் சசிகுமார் இப்போது “கத்துக்குட்டி”, “உடன் பிறப்பே” ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்திற்கு படக்குழு “நந்தன்” என தலைப்பு வைத்திருக்கிறது. இதுகுறித்த போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.