Categories
சினிமா தமிழ் சினிமா

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்… புலிக்கு அருகில் சென்று இடையூறு… சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!!!!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்சையில் சிக்கியுள்ளார்.

நடிகை ரவீனா தாண்டன் சென்ற 22ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரத்தில் இருக்கும் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். அவர், புலிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்றார். மேலும் அங்கு சுற்றி திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றார். அவருடன் சென்றவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றார்கள். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் பதிவிடப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான பாதையில் இருந்து மாறி சென்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கும் இடத்திற்கு நடிகை ரவீனா சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றது. மேலும் புலிக்கு மிகவும் அருகில் சென்று அதற்கு இடையூறு அளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்கும்படி வனத்துறை தரப்பில் வனத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்து வருகின்ற நிலையில் வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஜிப்பில் தான் சுற்றுலா சென்றதாகவும் வழித்தடத்தை விட்டு மாறி வேறு இடத்திற்கு எங்கும் செல்லவில்லை எனவும் ரவீனா விளக்கம் அளித்து இருக்கின்றார். இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Categories

Tech |