பிரிட்டிஷ் கொலம்பியாவின் south cast என்னும் பகுதியில் பனிப்பொழிவால் மின்தடை ஏற்பட்டு 30,000-கும் அதிகமான மக்கள் இருளில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் நேற்று இரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex fraser பாலம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இன்றும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதனால் கூடுமானவரை மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
வான்கூவர் மற்றும் abbostsford விமான நிலையங்களில் இருந்து புறப்படும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பயணம் செய்பவர்கள் சரியாக விசாரித்து கால தாமதத்தை தவிர்ப்பதற்காக சற்று முன்பாகவே பயணம் செய்யுமாறு விமான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் வான்கூவர் விமான நிலையத்தில் நேற்று மாலை 7 மணி அளவில் தரை இறங்கிய விமானம் ஒன்று வழுக்கிச் சென்று ஓடு பாதையை விட்டு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து எந்த விதமான தகவலும் விமான நிலையம் கூறவில்லை.