Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஜெயித்தால் மார்ச் முதல் இலவச மின்சாரம்!…. முதல்வர் பகவந்த்மான் வெளியிட்ட தகவல்….!!!!

182 உறுப்பினா்களை கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற இருக்கிறது. முதற் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (டிச..1) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனை முன்னிட்டு 3 கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

முதற் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனிடையில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வரும் மார்ச் மாதம் முதல் குஜராத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, குஜராத்தில் நிச்சயம் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும். நாங்கள் பா.ஜ.க-வின் பி டீம் என்று சிலரும், காங்கிரசின் பி டீம் என்று சிலரும் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் 130 கோடி மக்களின் ஏ டீம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |