தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. இந்த நிலையில் அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. இதை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருக்கிறது. இந்த புகைப்படங்களானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
And it’s a wrap in New Zealand 🇳🇿
song & it’s visuals are fabulous 🎶 @shankarshanmugh garu,@BoscoMartis & @DOP_Tirru made it even more special.@advani_kiara stunning as always👌@MusicThaman u nailed it again👍 @ManishMalhotra @AalimHakim thank you fr amazing looks. @SVC_official pic.twitter.com/1VJ9icH7VK— Ram Charan (@AlwaysRamCharan) November 30, 2022