தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இவர்கள் கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு என தல 42 லட்சம் என மதிப்பீடு செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்திற்கு 180 பேருந்துகள், சேலம் நூறு பேருந்துகள், கோவை 120, மதுரை 220, கும்பகோணம் 250 மற்றும் நெல்லை 130 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடு செய்யவும், காற்று மாசை குறைக்கவும் இந்த புதிய பேருந்துகள் பி.எஸ்-6 ரக பேருந்துகளாக வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.